Chapter 5 - Arun to Aruna

காலைச் சூரியனின் வெளிச்சம் முகத்தில் பட்டதும், அருணா மெல்லக் கண் விழித்தாள். படுக்கையில் இருந்து எழ முயன்றபோது, கால்களில்  கொலுசுகள் 'சலக்... சலக்...' என ஒலித்தன. 

அருணா கட்டி இருந்த புடவை கலைத்து இருந்தது அந்தப் புடவையோடு ஒரு முழுப் பெண்ணாக உறங்கிய அந்த சுகமான உணர்வு அவளுக்குள் இன்னும் அப்படியே இருந்தது.


​அப்போது கையில் டீ குடித்து கொண்டு வந்த அம்மா சங்கீதா, படுக்கையில் அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்தாள்

​அம்மா: "என்னடி அருணா, ராத்திரி பூரா புடவையில தூங்குனது எப்படி இருந்துச்சு? 

அருணா : எனக்கு புடிச்சி இருந்திச்சி அம்மா அது சோகமே தனி 

அம்மா : சரி பேசுனது போதும் , டைம் ஆச்சு பாரு. இன்னைக்கு திங்கட்கிழமை, ஸ்கூலுக்குப் போகணும். சீக்கிரம் இந்தத் துணியெல்லாம் கழட்டிட்டு, யூனிஃபார்ம் போட்டுட்டு வா."


​'ஸ்கூல்' என்ற வார்த்தையைக் கேட்டதுமே அருணுக்கு முகம் வாடிப்போனது. மனமில்லாமல் ஒவ்வொரு வளையலாகக் கழற்றினான். பின், தோளில் குத்தியிருந்த முந்தானை பின்னை எடுத்தான். அந்தப் புடவையின் மடிப்புகளை ஒவ்வொன்றாக விலக்கி, பிளவுஸையும், நெஞ்சை இறுக்கியிருந்த அந்த பிராவையும் கழற்றியபோது, தன் உடலில் இருந்த பெண்மை கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை உணர்ந்தான் அருண்.


​அருண் குளித்துவிட்டு  பேண்ட், ஷர்ட் அணிந்து பள்ளிக்குச் சென்றான் 
பள்ளி சென்றாலும், அவனது உடல் மட்டுமே அங்கே இருந்தது. ஆனால் அவனது மனம் முழுவதும்  பெண்களின் அடைகளை சுற்றியே வட்டமடித்து கொண்டு இருந்தது.



எப்போது மாலை ஆகும், எப்போது மீண்டும் வீட்டுக்குப் போய் 'அருணா'வாக மாறுவோம் என்ற ஏக்கம் அருணை வாட்டி வதைத்தது.


​மாலை 4:30 மணி...
​பள்ளி முடிந்து, புத்தகப் பையைச் சுமந்துகொண்டு வேக வேகமாக வீட்டிற்கு ஓடி வந்தான் அருண். வீட்டின் கதவைத் திறந்தபோது, அங்கே அவனுக்காகவே காத்திருந்தாள் சங்கீதா. 

கட்டிலின் மீது ஒரு அழகான  நீல நீறம் ஜாக்கெட்டும்,   பாவாடையும், தாவணியும் நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது.
​அம்மா: "ஸ்கூல்ல இருந்து வந்ததும் நேரா இங்கதான் வருவேன்னு எனக்குத் தெரியும். நேத்து நான் உன்னை அழகு படுத்திப் பார்த்தேன். ஆனா ஒரு முழுப் பொண்ணுன்னா, அவளுக்குத் தன்னைத்தானே அழகா டிரஸ் பண்ணிக்கத் தெரியணும்.


 இன்னைக்கு இந்த  பாவாடை தாவணியை எடுத்து நீயே கட்டிக்க . நான் பக்கத்துல இருந்துஉனக்கு சொல்லிதரேன் . வா, !"


​அருணுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல அத்தனை சந்தோஷம். தன் கைகளால் தன்னை ஒரு பெண்ணாக அலங்கரித்துக்கொள்ளப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் ஒரு மின்சாரத்தைப் பாய்ச்சியது.


​அருணாவின் அலங்காரப் படலம்:
​அம்மா சொல்லச் சொல்ல, அருண் முதலில் தனது சீருடையைக் கழற்றி எறிந்தான். கண்ணாடியின் முன் நின்றுகொண்டு, முதலில் அந்தப் பிராவை (Bra) எடுத்து அணிந்தான். ,  கைகளை வளைத்துப் பின்புறம் உள்ள கொக்கிகளைச் சரியாக மாட்டினான். 

அதனுள் துணிகளைச் சுருட்டி வைத்து, அச்சு அசலாகப் பெண்களுக்கு இருப்பது போன்ற மார்பக அமைப்பை (Breast shape) கச்சிதமாக உருவாக்கிக்கொண்டான். அந்த இறுக்கம் அவனுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.


​அம்மா: "அடுத்தது பாவாடையை எடுத்து இடுப்புல கட்டு , நாடாவை நல்லா டைட்டா கட்டுடி.  பாவாடை எப்பவும் இடுப்பை விட்டு இறங்கக் கூடாது."


​அருண் அந்த நீல நிறப்  பாவாடையை எடுத்துத் தன் இடுப்பில் சுற்றினான். அதன்  துணியின் வழுவழுப்பும், கனமும் அவனுக்குப் புதுவிதமாக இருந்தது. நாடாவை இடுப்பில் இறுக்கமாகக் கட்டியபோது, பாவாடை அவனது கால்களைச் சுற்றி அழகாக விரிந்து நின்றது.


​பின்னர், நீல நிற ஜாக்கெட்டை (Blouse) எடுத்து அணிந்தான். முகம் சுளிக்காமல், மூச்சை லேசாக உள்ளிழுத்துப் பிடித்துக்கொண்டு, ஜாக்கெட்டின் முன் கொக்கிகளை ஒவ்வொன்றாகப் போட்டான். அந்த இறுக்கமான பிளவுஸ், அவனது மார்பக அமைப்பை இன்னும் எடுப்பாகக் காட்டியது. கண்ணாடியில் தன் பாவாடை, பிளவுஸ் தோற்றத்தைப் பார்த்த அருணின் முகத்தில் அத்தனை வெட்கம்.

​அம்மா: "இப்போ  தாவணியை எடு. அதை எப்படி மடிச்சுப் போடணும்னு நான் சொல்றேன்."
​அம்மா சொல்லிக்கொடுத்தபடி, அந்தப்  மஞ்சள் நிறத் தாவணியின் ஒரு முனையை எடுத்துப் பாவாடையின் வலதுபுற இடுப்பில் இறுக்கமாகச் சொருகினான். மீதமுள்ள தாவணியை எடுத்து, அழகாக மடிப்புகளை (Pleats) உருவாக்கினான்.

​அம்மா: "அப்படித்தான்... இப்போ அந்த மடிப்புகளை அப்படியே உன் நெஞ்சுக்குக் குறுக்கால கொண்டு வந்து, இடது தோள்ல வச்சுப் பின் குத்து. தாவணி எப்பவும் நெஞ்சை இறுக்கிப் பிடிச்ச மாதிரி இருக்கணும், அப்போதான் பாவாடை தாவணிக்கு ஒரு களை இருக்கும்."


​அம்மா சொன்னபடியே, அருண் அந்தத் தாவணியைத் தன் மார்பக அமைப்பின் மீது இறுக்கமாகப் படியும்படி இழுத்து, இடது தோளில் வைத்துப் பின் குத்தினான். இப்போது அந்தத் தாவணி அவனது உடலோடு ஒட்டி, ஒரு கச்சிதமான இளம்பெண்ணின் தோற்றத்தை அவனுக்குக் கொடுத்தது.


​அடுத்து மேக்கப். தன் கைகளாலேயே முகத்திற்குப் பவுடர் போட்டு, கண்களுக்கு மையெழுதி, உதடுகளுக்கு  லிப்ஸ்டிக் தடவினான் . 

​அம்மா: "கடைசியா, இந்த நகைகளைப் போட்டுக்கோடி..." என்று ஒரு டப்பாவைக் கொடுத்தாள்.
​அருண் மிகவும் ஆசையாகப் கண்ணாடி வளையல்களைத் தன் இரு கைகளிலும் ஒவ்வொன்றாக அணிந்தான் . அவை 'க்ளிக்... க்ளிக்...' என வலையல்கள் உரசிக் கொண்ட சத்தம் அவனுக்கு இசையாகக் கேட்டது.


 கழுத்தில் ஒரு தங்க சங்கிலியையும், காதுகளில் பெரிய ஜிமிக்கியையும் மாட்டிக்கொண்டான். கால்களில்  கொலுசுகளை அணிந்தான்.


​அங்கே...கண்ணாடி முன் 
 பாவாடையின் மினுமினுப்பிலும், இறுக்கமான தாவணியின் மிடுக்கிலும், முகம் நிறைய மேக்கப் மற்றும் நகைகளோடும் ஒரு  பேரழகி போல அருண் நின்று கொண்டிருந்தாள்.

 தன்னைத்தானே   ஒரு பெண்ணாக மாற்றிகொண்ட அந்த உணர்வு, அருணாவுக்குள் இருந்த பெண்மையை முழுமையாக விழிப்படையச் செய்தது.
​கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்து, தாவணியை லேசாகச் சரிசெய்து கொண்டும்,  தன் அழகில் தானே மயங்கி நின்றாள் அருணா.

​சங்கீதா தன் மகனின் இந்த மாற்றத்தைப் பார்த்து, திருஷ்டி கழிப்பது போலத் தன் விரல்களை நெட்டி முறித்துக்கொண்டாள்.


​அம்மா: "என் அருணாவுக்குப் பாவாடை தாவணி எப்படி அம்சமா பொருந்தியிருக்கு பாரு!
எனக்கு பொண்ணு இல்லாத குறைய நீ தீத்துட்ட  என்றாள் பெருமிதத்துடன்.



அம்மாவின் அந்த அன்பான வார்த்தைகளைக் கேட்டதும் அருணாவின் முகம் இன்னும் சிவந்தது. ஓடிவந்து அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.


​அருணா: "தேங்க்ஸ் மா... எனக்கு இந்த பாவாடை தாவணி ரொம்ப பிடிச்சிருக்கு மா. என்னை ஒரு பொண்ணா நீங்க ஏத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு."


​சங்கீதா அருணாவின் தலையைக் கோதி, காற்றில் கலைந்திருந்த முன் நெற்றி முடிகளை மென்மையாக ஒதுக்கி விட்டாள். ஒரு தாய்க்கும் மகளுக்குமான அந்த இயல்பான பாசத்தோடு, அருணாவின் முடியில் பூ வைத்து அழகு பார்த்தால் 


​அம்மா: "சரிடி பூ வச்சாச்சு அப்படியே கொஞ்ச  மொட்டை மாடிக்குப் போய் காலையில காயப்போட்ட துணியெல்லாம் எடுத்துட்டு வா டி 
சாயங்காலம் இருட்டப் போகுது பாரு," என்று மிகவும் இயல்பாக, ஒரு மகளிடம் வேலை சொல்வது போலவே சொன்னாள்.


அருணா உடனே நகரவில்லை.  தாவணி முந்தானையை பிடித்துக்கொண்டு, தயக்கத்துடன் அம்மாவைப் பார்த்தாள். அவளது முகத்தில் பயமும் சலனமும் போட்டிபோட்டன.


​அருணா: "அம்மா... அது வந்து... நான் பொண்ணு மாதிரி பாவாடை தாவணியெல்லாம் கட்டிக்கிட்டு இருக்க எப்படி மா மாடிக்குப் போறது?

 எதிர் வீட்ல, பக்கத்து வீட்ல யாராவது என்னை பார்த்துட்டா ?  நான் பையன்னு யாருக்காவது சந்தேகம் வந்துட்டா... எனக்கு ரொம்ப பயமா இருக்கு மா! நான் போகல மா..."


​சங்கீதா அருணாவின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி, அவளது பயத்தைப் போக்கும் வகையில் புன்னகைத்தாள்.


​அம்மா: "அடிப் பைத்தியமே! உன்னைப் பார்த்தா யாருக்கும் நீ பையன்னு துளிகூட சந்தேகம் வராதுடி. அந்த அளவுக்கு நீ ஒரு முழுப் பொண்ணா மாறிட்ட.  பாவாடை தாவணினு கட்டிக்கிட்டு மகாலட்சுமி மாதிரி நிற்கிற.உன்னை யாராவது பார்த்தாலும் நம்ப வீட்டுக்கு ஏதோ சொந்தக்காரப் பொண்ணு வந்திருக்கா'னுதான் நினைப்பாங்க.


போடி உனக்குள்ள இருக்குற பெண்மையை நாலு சுவருக்குள்ள மட்டும் பூட்டி வைக்காதடி. தைரியமா போ டி ... உன் அழகையும் நளினத்தையும் இந்த உலகமும் கொஞ்சம் பார்க்கட்டும்!"


​அம்மாவின் அந்த வார்த்தைகள் அருணாவுக்குள் ஒரு புதிய தைரியத்தையும், தன் அழகின் மீதான ஒரு சிறு கர்வத்தையும் கொடுத்தன. லேசாக வெட்கப்பட்டுப் புன்னகைத்தபடி மெல்லத் தலையசைத்தாள்.


​அருணா தன் நீல நிறப் பாவாடையின் ஓரமாக லேசாகப் பிடித்துக்கொண்டு, மாடிப்படிகளில் ஏறினாள். ஒவ்வொரு படியிலும் அவளது கால்களில் இருந்த கொலுசுகள் 'சலக்... சலக்...' என ஒலித்தன. கைகளில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் ஒன்றோடொன்று உரசிக் கிளப்பிய ஓசை அவளுக்குள் ஒரு புதுச் சிலிர்ப்பைக் கொடுத்தது.
​மொட்டை மாடியை அடைந்ததும், குளிர்ந்த மாலை நேரக் காற்று அவளைத் தழுவியது. காற்றில் மஞ்சள் நிறத் தாவணி விலகாமல் இருக்க, அதை தன் இடது கையால் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துப் பிடித்துக்கொண்டாள். கொடியில் இருந்த துணிகளை வளைந்து நெளிந்து ஒவ்வொன்றாக எடுக்கத் தொடங்கினாள். 'நான் உண்மையிலேயே ஒரு பெண்தான்' என்ற எண்ணம் அவளது அசைவுகள் ஒவ்வொன்றிலும் நிறைந்திருந்தது.
​அப்போது...



​அப்போது பக்கத்து வீட்டு மொட்டை மாடிக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
​அங்கே வந்தது வேறு யாருமல்ல; அருனின் தோழி ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவியான நந்தினி! இருவரும் நண்பர்கள் 
​நந்தினியும் தன் மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க வந்திருந்தாள். 


அவள் பக்கத்து வீட்டு மாடியில் மஞ்சள் நிறத் தாவணி அணிந்து,  நின்றுகொண்டிருந்த அருணாவைப் பார்த்ததும் நந்தினியின் பார்வை அங்கே நிலைத்தது.


​அருணுக்கு இதயம் 'திக் திக்' என வேகமாக அடித்தது. 'ஐயையோ... நந்தினியா! இவ என் கிளாஸ்மேட் ஆச்சே... தினமும் ஸ்கூல்ல  பாக்குறவளாச்சே!' என்று பயந்து, துணிகளை அப்படியே விட்டுவிட்டுத் திரும்பி வேகமாக ஓட முயன்றாள்.


​நந்தினி: "ஹலோ... நீங்க யாரு? சங்கீதா ஆன்ட்டி வீட்டுக்கு புதுசா வந்திருக்கீங்களா? பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க!" என்று இயல்பாகக் கேட்டாள்.


​அருணா பயத்தில் பேசாமல், தலையைக் குனிந்தபடி உறைந்து நின்றாள். அருணா பதில் சொல்லாததால் நந்தினிக்கு லேசான சந்தேகம் வந்தது. இரு மாடிகளுக்கும் இடையே இருந்த சிறிய தடுப்புச் சுவரின் அருகே வந்து, அருணாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். 
​அந்த மாலை நேரத்து வெளிச்சத்தில், தினமும் வகுப்பறையில் தன் அருகிலேயே அமரும் அருணின் முகச் சாயல் நந்தினியின் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்தது. நந்தினியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.


​நந்தினி: (அதிர்ச்சியில் உறைந்துபோய்) "அருண்...??? ஏய் அருண்... நீயா இது???"



​அந்த வார்த்தை கேட்டதும் அருணா க்கு தன் ரகசியம் அம்பலமான அதிர்ச்சியில் அவள் திகைத்து நின்றாள்....

Comments

  1. Supera irukku
    Romba alagana writing
    Surprise ending waiting for nex

    ReplyDelete
  2. கதை நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. Super story continue pannunga seekram

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Chapter 1 - Arun to Aruna

Chapter 1 – Village la irundhu City ku vara payan

Chapter 6 – Oru full Day, saree