Chapter 4 - Arun to Aruna
அம்மா அருணா வை பார்த்து வீட்டு வேலை ஆரம்பிக்கலாமா டி அம்மா : "பொம்பள மாதிரி புடவை கட்டி... முகம் நிறைய மேக்கப் போட்டு . பூ வச்சி வளையல் கம்மல் போட்ட மட்டும் பத்தாது டி பொம்பளைப் பிள்ளைனா வீட்டு வேலையிலயும் கெட்டிக்காரியா இருக்கனும் டி. முதல்ல இந்தத் துடைப்பத்தை எடுத்து, ஹாலையும் கிச்சனையும் சுத்தமா பெருக்கு பார்ப்போம்." அருணா தயக்கத்து உடன் துடைப்பத்தை வாங்கினாள். ஆனால், அவளுக்குக் குனிந்து பெருக்கத் தெரியவில்லை. லேசாகக் குனிந்தபோது புடவையின் முந்தானை தரையில் உரசியது. அம்மா : "எப்போமே , புடவையோட வேலை செய்யும்போது முந்தானையை தொங்க விட கூடாது அதை எடுத்து இடுப்புல டைட்டா சொருகிக்கோ. அப்போதான் வேலை செய்ய ஈஸியா இருக்கும்." அம்மா சொன்னது போலவே அருணா தன் முந்தானையை எடுத்து இடுப்பில் இறுக்கமாகச் சொருகிக்கொண்டாள். இப்போது அவள் குனிந்து வீட்டைப் பெருக்க ஆரம்பித்தாள். அவள் வளைந்து குனிந்து பெருக்கும்போது, அந்த மெல்லிய புடவை அவளது உடலோடு அசைந்து கொடுத்தது. ஒவ்வொரு முறை அவள் அசையும் போது கைகளில் இருந்த வள...