Posts

Showing posts from November, 2026

Buy One get One free

Image
​கோடை விடுமுறை தொடங்கியிருந்த அந்தச் சுட்டெரிக்கும் வெயில் நாளில், ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற  கோவில் திருவிழா கோலாகலமாகத் தொடங்கவிருந்தது.  திருவிழாவிற்காக ஊரே களைகட்டியிருந்தது. அங்கு ஒரு வீட்டின் இளையவனான பிரியன் 14வயது , தன் அம்மா விற்காகக் காத்திருந்தான் . புதிய ஆடைகள் வாங்குவதற்காக கடைக்குச் சென்று தான் தாய் மீனாட்சி வீடு திரும்பியிருந்தார். ​கதிரவன் ஆசையோடு ஷாப்பிங் பையைத் திறந்து பார்த்தான். ஆனால், உள்ளே இருந்த காட்சியைப் பார்த்து அவனுக்குத் தலை சுற்றியது. பைக்குள் இருந்த ஆடைகள் அனைத்தும் பெண்களுக்கானவை. அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த அவன், உடனே தன் தாயைக் கூப்பிட்டுக் கேட்டான்: ​"எனக்கு புது துணி எடுக்கவில்லையா அம்மா? எல்லாமே பொண்ணுங்க துணியா இருக்கு இந்த பையில்!" ​அம்மா மீனாட்சி சமையலறையில் இருந்து சிரித்தபடியே வெளியே வந்தார். அவளது முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை இருந்தது. ​"ஆமாம் பா,  பாவாடை தாவணி தான் இருக்கும் . 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' (Buy 1 Get 1 Free) ஆஃபர் போட்டிருந்தாங்க.  அதான் உனக்கு ஒன்னு, உங்க அக்காவுக்கு ஒன்னு வாங்கிட...