Posts

Showing posts from October, 2026

Chapter 7 - Arun to Aruna

Image
அம்மா சங்கீதா நடத்தி வந்த பூக்கடை வியாபாரத்தை இப்போது அருணா முழுமையாக ஏற்று நடத்தத் தொடங்கினாள்.  தினமும் காலையில் விதவிதமான மல்லிகைப் பூக்கள், ரோஜாக்கள் மற்றும் நறுமண மலர்களை வைத்துத் திருமண வரவேற்புக்கான பிரம்மாண்டமான பூ அலங்காரங்கள் order களை (Decorations) மற்றும் அழகான பூங்கொத்துகளை (Bouquets) தன் கைவண்ணத்தால் உருவாக்கினாள். வியாபாரத்தை விரிவு படுத்தினாள்.. ​இப்போது அவளுக்கு முகமூடி தேவையில்லை. வீட்டைவிட்டு வெளியே சாதாரணமாக நடமாடத் தொடங்கினாள். கடைக்கு செல்லும்போதும்,  சுடிதார்,  பாவாடை தாவணி மற்றும் சில நேரங்களில் அழகான  புடவைகளை அணிந்து கொண்டு ஊருக்குள் மிகவும் இயல்பாக செல்ல ஆரம்பித்தாள் அருணா .  அருணாவின் வியாபார திறமையையும், அவளது அழகையும், அவளது பணிவான குணத்தையும் பார்த்து ஊர் மக்களும், கடைக்கு வருபவர்களும் அவளை ஒரு முழுமையான, திறமையான இளம் பெண்ணாகவே ஏற்றுக்கொண்டு அன்போடு பழகினர். ​நாட்கள் வருடங்களாக பறந்தன. நந்தினி தனது கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதே ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக (Teacher) பணியில் சேர்ந்தாள்...

Chapter 6 - Arun to Aruna

Image
நந்தினியின் வாயிலிருந்து "அருண்...!!!" என்ற பெயர்  வெளிவந்த அடுத்த கணம்,  அவள் முகம் அப்படியே தக்காளிப் பழம் போலச் சிவந்துபோனது.  தன்னோடு ஒரே வகுப்பில் படிக்கும் தோழியிடம் மாட்டிவிட்டோமே என்ற அலாதியான வெட்கமும் தர்மசங்கடமும் அவளை அடியோடு உலுக்கியது. ​வெட்கம் தலைக்கேற, அருணா தன் இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு லேசாக உடம்பை வளைத்து நெளிந்தாள். தன் இடது கையால் தாவணியை நெஞ்சோடு இறுக்கமாகச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, கொலுசு போட்ட கால்களை ஒன்றோடொன்று பிணைத்துத் தலையைக் குனிந்து நின்றாள் அருணா . ​நந்தினி அருணாவை உச்சி முதல் பாதம் வரை  பார்த்து, ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றாள். ​ நந்தினி : டேய் அருண்... என்னடா இது! பாவாடை, பிளவுஸ், தாவணி, காதுல  கம்மல்,  வளையல், கழுத்துல செயின்... நீளமா முடி வேற வச்சுகிட்டு அழகா ஜடை பின்னி பூ வேற வச்சுக்கிட்டு நல்லா போட்ட புள்ள மாதிரி மின்னுகுற!  உன்னை இந்த கோலத்துல யார் பார்த்தாலும் நிஜப் பொண்ணுதான் நினைப்பாங்க. ​நந்தினி அப்படிச் சொன்னதும் அருணாவிற்கு வெட்கம் இன்னும் கூடியது .  அருணா : த...