Chapter 4 - Arun to Aruna

அம்மா அருணா வை பார்த்து வீட்டு வேலை ஆரம்பிக்கலாமா டி 

​அம்மா: "பொம்பள மாதிரி புடவை கட்டி... முகம் நிறைய மேக்கப் போட்டு . பூ வச்சி வளையல் கம்மல் போட்ட மட்டும் பத்தாது டி  பொம்பளைப் பிள்ளைனா வீட்டு வேலையிலயும் கெட்டிக்காரியா இருக்கனும் டி. 


முதல்ல இந்தத் துடைப்பத்தை எடுத்து, ஹாலையும் கிச்சனையும் சுத்தமா பெருக்கு பார்ப்போம்."

​அருணா தயக்கத்து உடன் துடைப்பத்தை வாங்கினாள். ஆனால், அவளுக்குக் குனிந்து பெருக்கத் தெரியவில்லை. லேசாகக் குனிந்தபோது புடவையின் முந்தானை தரையில் உரசியது.


​அம்மா: "எப்போமே , புடவையோட வேலை செய்யும்போது முந்தானையை  தொங்க விட கூடாது அதை எடுத்து இடுப்புல  டைட்டா சொருகிக்கோ. 

அப்போதான் வேலை செய்ய ஈஸியா இருக்கும்."



​அம்மா சொன்னது போலவே அருணா தன்  முந்தானையை எடுத்து இடுப்பில் இறுக்கமாகச் சொருகிக்கொண்டாள். 

இப்போது அவள் குனிந்து வீட்டைப் பெருக்க ஆரம்பித்தாள். அவள் வளைந்து குனிந்து பெருக்கும்போது, அந்த மெல்லிய  புடவை அவளது உடலோடு அசைந்து கொடுத்தது.

 ஒவ்வொரு முறை அவள்  அசையும் போது கைகளில் இருந்த வளையலும் 'கால்களில் இருந்த கொலுசுகள் 'கலகல'வென சத்தமிட்டன. 

​ஒரு பெண்ணை போல வீட்டைச் சுத்தம் செய்யும் அந்தத் தருணம், அருணாவுக்குள் இருந்த பெண்மையை இன்னும் முழுமையாக்கியது. 


வீட்டைப் பெருக்கி முடித்ததும், அவளது முகத்தில் லேசாக வேர்வை அரும்பியிருந்தது. நெற்றியில் இருந்த முடிகளையும், கலைந்த பொட்டையும் தன் வளையல் அணிந்த கைகளால் லேசாகச் சரி செய்துகொண்டாள்.


​அம்மா: "பரவாயில்லையே, ரொம்ப நல்லா பெருக்குற. ஆனா வேலை இதோட முடியல. அடுப்பைப் பத்த வச்சு எனக்கு ஒரு சூடா டீ போடுடி பார்ப்போம்."


​அருணா அடுப்பங்கரையில் நின்று பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்தாள். சமையலறையின் லேசான வெப்பம் அவளைத் தாக்கியது. 


அந்த இறுக்கமான பிளவுஸும், இடுப்பில் சுற்றியிருந்த புடவையும் அவளுக்குள் ஒருவித வியர்வையையும், அதே சமயம் ஒரு சுகமான பாரத்தையும் கொடுத்தன.


​டீத்தூள், சர்க்கரை எடுத்துப் போட்டு அவள் கரண்டியால் கலக்கும்போது, அவளது தோளில் சரிந்திருந்த முந்தானை லேசாக நழுவியது. அதை மிகவும் நளினமாக எடுத்து மீண்டும் தோளில் போட்டுக்கொண்டாள்.

​அருணா: (வியர்வையைத் துடைத்தபடி) "அம்மா... கிச்சன்ல புடவை கட்டிக்கிட்டு வேலை செய்யறது அவ்ளோ ஈஸி இல்ல மா. ரொம்ப புழுக்கமா இருக்கு. பிரா வேற ரொம்ப டைட்டா நெஞ்சை இறுக்குது."


​அம்மா: (சிரித்துக்கொண்டே) "ஆமாண்டி,  பொம்பளைங்க நாங்க டெய்லி இந்த கஷ்டத்தை அனுபவிச்சுதான் கிச்சன்ல  சமைக்கிறோம். 

நீ இப்போதான் புதுசா புடவை கட்டி இருக்க போகப் போகப் பழகிடும். சீக்கிரம் டீயை எடுத்துட்டு வா."


​அடுப்பங்கரையில் நின்று,  டீ வடிகட்டும் தன்னை  சமையலறை ஜன்னல் கண்ணாடியில் பார்த்தாள்.

 'புடவை கட்டி சமைக்கும் போது தான் நிஜமாவே ஒரு முழுமையான பொண்ணாக மாறிட்டேன்' என்று அவளுக்குத் தோன்றியது. அவனுள் இருந்த அருண் முழுவதுமாக மறைந்து, இப்போது அங்கே ஒரு அழகான பெண் 'அருணா' மட்டுமே நின்றுகொண்டிருந்தாள்.




​டீ தயாரானதும், இரண்டு கப்களில் ஊற்றி, ஒரு தட்டில் வைத்து நடந்து வந்து அம்மாவிடம் கொடுத்தாள் அருணா. அந்தப் பர்ப்பிள் நிற ஷிபான் புடவையில், ஒரு பொறுப்பான குடும்பத் தலைவி போலவே அவள் நடந்து வந்ததைப் பார்த்து அம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.


​அம்மா: "டீ ரொம்ப வாசமா இருக்கு அருணா. நீ வீட்டைச் சுத்தமா பெருக்கின அழகையும், சமையலறையில வேலை செஞ்ச விதத்தையும் பார்த்தா, எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு."
​அருணா வெட்கத்துடன் சிரித்தாள். அவளது முகத்தில் இதுவரை இல்லாத ஒரு புதிய சந்தோஷம் மலர்ந்தது.


​டீ குடித்து முடித்ததும் அம்மா தரையில் ஒரு பாயை விரித்தாள். கூடை நிறைய மல்லிகைப் பூக்களையும், ரோஜாக்களையும் கொண்டு வந்து வைத்தாள்.


​அம்மா: "வாடி, வந்து உக்காந்து நாளைக்குக் கடைக்குத் தேவையான பூவை கட்டி வைப்போம்."
​அருணா இப்போது மிகவும் கவனமாக, புடவை மடிப்புகள் கலையாமல், கால்களை ஒடுக்கி அழகாகப் பாயில் அமர்ந்தாள். முந்தானையை மடியில் போட்டுக்கொண்டு பூக்களை எடுத்துத் தொடுக்க ஆரம்பித்தாள்.

​அருணா: (பூ கட்டிக்கொண்டே மெல்லிய குரலில்) 
"அம்மா..."

​அம்மா: "சொல்லுடி."

​அருணா: "நிஜமாவே நான் உனக்கு பொண்ணா பொறந்திருக்கலாமோன்னு தோணுது மா. எனக்கு இந்த டிரஸ், இந்த வளையல் சத்தம், இப்படி உன்கூட உக்காந்து பூ கட்டுறது... எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு. இதைக் கழட்டவே மனசு வரல."


​சங்கீதா பூ கட்டுவதை நிறுத்திவிட்டு, அருணாவின் முகத்தை அன்போடு பார்த்தாள்.


​அம்மா: "அதுக்கு என்னடி இப்போ? வீட்டை விட்டு வெளியே போனா நீ அருண். ஆனா வீட்டுக்குள்ள,  எனக்கு எப்பவும் நீ என் பொண்ணு அருணா தான். உனக்கு எப்பல்லாம் பொண்ணா இருக்கணும்னு தோணுதோ, அப்பல்லாம் நீ தாராளமா என் புடவை தாவணி எடுத்து கட்டிக்கலாம். உன்னை அழகு படுத்த தான் நான் இருக்கேன்."


 அம்மாவின் அந்த வார்த்தைகளும் அந்தப் புரிதலும்,அன்பும் அருணவை நெகிழ வைத்தன.


​இரவு உணவு முடிந்து, கடிகாரம் பத்தரை மணியைத் தொட்டது.


​அருணா: "அம்மா, நான் போய் டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன் மா. புடவையில தூங்க முடியாது."


​அம்மா: "யார் சொன்னது முடியாதுன்னு? இன்னைக்கு நீ ஒரு முழுப் பொண்ணா மாறிட்ட. இந்த நாள் உனக்கு எப்பவும் ஞாபகம் இருக்கணும். அதனால இன்னைக்கு நைட் நீ இந்த  புடவையோடவே தூங்கு டி. முந்தானையை மட்டும் கொஞ்சம் தளர்த்தி விட்டுட்டு, அப்படியே படுத்துக்கோ."


​அருணாவுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அந்தப் புடவையைக் கழற்ற அவளுக்கும் மனமில்லை.


அருணா : "சரிம்மா," என்று தலையசைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.
​படுக்கையில் சாய்ந்த அருணா, தன் புடவை மடிப்புகளைத் தடவிப் பார்த்தாள். கைகளில் இருந்த வளையல்களை ஒவ்வொன்றாக எண்ணி ரசித்தாள். 

ஒரு முழுமையான பெண்ணாக, 'அருணா'வாகத் தன்னை உணர்ந்த அந்த இரவின் சுகமான நினைவுகளோடு, மல்லிகைப் பூவின் வாசனை யோடு நிம்மதியாகக் கண் மூடினாள்.

Comments

  1. மிகவும் சிறப்பான அழகான பதிவு
    தொடர்ந்து எழுதவும்

    ReplyDelete
  2. Good Start di apdiya marriage pandra mari kondu podi

    ReplyDelete
  3. அன்னையின் பெண்மை கலந்த ஆதரவை பெற்ற ஆண் மகன் அடுத்த பகுதியை விரைவில் எழுதுங்கள்

    ReplyDelete
  4. அடுத்த பகுதியை விரைவில் பதிவிடுங்கள்

    ReplyDelete
  5. அடுத்த பகுதி அல்லது புது கதையை எழுதுங்கள்

    ReplyDelete
  6. Please 🙏 🙏 🙏 next part

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Chapter 1 - Arun to Aruna

Chapter 1 – Village la irundhu City ku vara payan

Chapter 6 – Oru full Day, saree