chapter 3 - Arun to Aruna

அம்மாவைப் பார்த்த அதிர்ச்சியில், கைகளால் தன் மார்பை மறைத்தபடி சிலையாக நின்ற அருணுக்கு இதயம் தொண்டைக்குழி வரை வந்து துடித்தது. 'அம்மா என்ன நினைப்பாங்களோ?



 கோபப்படுவாங்களோ? திட்டுவாங்களோ?' 

என ஆயிரம் கேள்விகள் அவன் மூளையைக் குடைந்தன. அவனது கண்கள் பயத்தில் கலங்கியிருந்தன.


​சங்கீதா சில விநாடிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாலும், அடுத்த கணமே அவளது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை . தன் மகன் மீது அவளுக்குக் எந்த கோபமும் வரவில்லை; மாறாக, தான் அறிமுகப்படுத்திய அந்தப் பெண்மை அவனுக்குள்ளும் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை எண்ணி ஒருவித ஆச்சரியமே ஏற்பட்டது.


​அருண்: (தழுதழுத்த குரலில்) "அம்மா... என்னைத் தப்பா நினைக்காதம்மா. ஏதோ ஒரு ஆசையில... நானே எடுத்து..." 

என்று வார்த்தைகள் வராமல் திணறினான்.

​சங்கீதா மெல்ல நடந்து அருணின் அருகே வந்தாள். அவனது மார்பை மறைத்திருந்த கைகளை மெதுவாக விலக்கிவிட்டாள்.


​அம்மா: "எதுக்குடி எங்கிட்டயே வெட்கப்படுற? உன்னை முதன்முதல்ல பொண்ணாக்கி அழகு பார்த்ததே நான்தானே. இதுல தப்பா நினைக்க என்னடி இருக்கு?

 உனக்கு பொண்ணுங்க டிரஸ் மேல இவ்வளவு ஆசை வந்திருச்சுன்னு எங்கிட்டயே சொல்லியிருக்கலாம்ல?" 

என்று ஆசையோடு அவனது கன்னத்தைத் கிள்ளினால் .

​அம்மாவின் அந்த அன்பான வார்த்தைகளைக் கேட்டதும், அருணுக்குள் இருந்த பயம் முழுவதுமாக நீங்கி, நிம்மதி பெருமூச்சு வந்தது. அதே நேரம் ஒருவித வெக்கம் நாணம் அவனை ஆட்கொண்டது. தலையை லேசாகக் குனிந்துகொண்டான்.


​அம்மா: "சரி டி இப்படியே பாவாடையும், பிளவுஸும் மட்டும் போட்டுகிட்டு அரைகுறையா  எவ்ளோ நேரம் தான் நிற்க போற ?

  ...  அதுக்கு மேல தாவணியோ, புடவையோ கட்டுன தானே முழுமையா இருக்கும்?" என்று சொல்லிவிட்டு, பீரோவை நோக்கி நடந்தாள்.


​அருண் ஆச்சரியத்துடன் அம்மாவைப் பார்த்தான்.​சங்கீதா பீரோவுக்குள் இருந்த தனது துணிகளை விலக்கி, ஒரு மெல்லிய பர்ப்பிள் கலர் ஷிபான் புடவையை (Purple Chiffon Saree) வெளியே எடுத்தாள். அந்தப் புடவை பார்ப்பதற்கே மிகவும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருந்தது.

​அம்மா: "சுடிதார், பாவாடை தாவணின்னு உன்னை போட வச்சி பார்த்தாச்சு. இன்னைக்கு உன்னை ஒரு முழுப் பொம்பளையா புடவையில பார்க்கப் போறேன்.

இங்க வாடி , நான் உனக்குக் புடவை கட்டி விடுறேன்." என்றால்...


​அருணுக்குக் கைகால்கள் ஓடவில்லை. 'புடவையா? நம்ம புடவை கட்டப் போறோமா?' என்ற எண்ணமே அவனுக்குள் ஒருவித மின்சாரத்தைப் பாய்ச்சியது.

​சங்கீதா அந்தப் பர்ப்பிள் நிற ஷிபான் புடவையை அருணின் இடுப்பில் செருகி, அவனது உடலோடு ஒட்டி உறவாடும்படி நளினமாக மடிப்புகளை எடுத்தாள். அந்தப் புடவையின் மென்மை அவனது மேனியைத் தழுவியபோது, அருணுக்குள் சொல்ல முடியாத சிலிர்ப்பு ஏற்பட்டது. 

புடவையின் முந்தானையை அழகாக விசிறிப்போல மடித்து, அவனது இடது தோளில் வைத்துப் பின் குத்தினாள் அம்மா . அந்த இறுக்கமான பிளவுஸும் , அதன் மேலிருந்த புடவை மடிப்புகளும் அவனுக்கு ஒரு கச்சிதமான பெண்ணின் உருவத்தைக் கொடுத்தன.



​அம்மா: "இப்போ இரு, மெயின் பிக்சரே இனிமேதான்," என்று சொல்லி, அவனை நாற்காலியில் உட்கார வைத்தாள். Hair extention ( சாவ்ரி முடி மாட்டி ஜடை பின்னி பூ வைத்தால் அம்மா..

சிறிது மேக்கப் போட்டாள். கண்களுக்கு அடர்த்தியாக காஜல், உதடுகளுக்கு மெல்லிய ரோஸ் நிற லிப்ஸ்டிக், நெற்றியில் சிறிய கல் வைத்த பொட்டு என அவனது முகத்தையே மாற்றினாள்.  விட்டாள். கடைசியாக, கழுத்தில் ஒரு அட்டிகையும், கைகளில் புடவைக்கு மேட்ச்சாக வளையல்களையும் மாட்டிவிட்டாள்.


​அம்மா: "இப்போ எழுந்து போய் கண்ணாடியைப் பாருடி என் ராசாத்தி!"

​அருண் மெல்ல எழுந்து, புடவை கால்களில் தட்டாமல் இருக்க ஒரு கையால் லேசாகத் தூக்கிப் பிடித்தபடி, வளையல்கள் ஒலிக்க நிலைக்கண்ணாடியின் முன் சென்று நின்றான்.


​கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தைப் பார்த்த அருணுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அங்கே ஒரு பையனின் சாயல் துளிகூட இல்லை. பர்ப்பிள் கலர் ஷிபான் புடவையில், அம்சமான முகத்தோடும், அடக்கமான பார்வையோடும், அச்சு அசலாக ஒரு பேரழகி நின்று கொண்டிருந்தாள். புடவை அவனது பெண்மையை இன்னும் அதிகமாக, கம்பீரமாக எடுத்துக் காட்டியது.


​அருணா தன் முந்தானையைச் சரிசெய்து கொண்டு. தன்னைத்தானே ரசித்துக் கொண்டிருந்தாள். அந்த நிமிடம், அருணுக்குள் இருந்த அந்தப் ஆண் முழுமையாக மறைந்து, 'அருணா' என்ற அந்தப் பெண் முழுமையாக உயிர் பெற்றுவிட்டாள் என்பதை அவனது அந்த வெட்கப் புன்னகை உணர்த்தியது.


அம்மா: "என்னடி, உன்னையே கண்ணு வச்சிடுவ போலருக்கு? ரொம்ப அழகா இருக்க அருணா. ஆனா, புடவை கட்டிக்கிட்டு ஆம்பளைப் பையன் மாதிரி நடக்கக் கூடாது. இடுப்பை லேசாக வளைச்சு, கால்களை ஒட்டி வச்சு, நளினமா நடக்கணும். நடந்து காட்டு பார்ப்போம்."


​அம்மா சொன்னது போலவே அருணா ஹாலில் நடந்து பழகினாள். ஒவ்வொரு அடிக்கும் கொலுசின் சத்தமும், வளையல்களின் ஓசையும் ஒரு வித உணர்ச்சியை தூண்டியது 

அருணா ஹாலில் நடந்து பழகிய அந்த நளினமான அழகைப் பார்த்த சங்கீதாவுக்குப் பெருமையாக இருந்தது.


​அம்மா: "அருணா, நில்லுடி அங்கயே! இந்த அழகை நான் அப்படியே என் போன்ல போட்டோ எடுக்கப் போறேன். என்னோட பொண்ணு புடவையில எப்படி தேவதை மாதிரி இருக்கான்னு எனக்கு எப்பவும் ஞாபகம் இருக்கணும்ல!" என்று சொல்லிக்கொண்டே தனது செல்போனை எடுத்தாள்.


​அருணா: (வெட்கத்துடன் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு)

"அம்மா... ப்ளீஸ் மா... எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. போட்டோ எல்லாம் வேணாம் மா."



​அம்மா: "சும்மா இருடி, கையை எடு முகத்துல இருந்து," என்று அதட்டிவிட்டு, விதவிதமாகப் புகைப்படங்களை எடுத்தாள்.
 முந்தானையைப் பிடித்துக்கொண்டு நிற்பது போல, வெட்கப்பட்டுத் தலை குனிவது போல என அம்மா சொல்லச் சொல்ல, அருணா ஒரு மாடல் அழகியைப் போல விதவிதமாகப் போஸ் கொடுத்தாள்.

 போனில் பதிவான தனது புகைப்படங்களைப் பார்த்த அருணாவுக்கு, அது தான் தானா என்ற சந்தேகமே மீண்டும் வந்தது. அந்தப் பர்ப்பிள் நிற ஷிபான் புடவை அவளுக்கு அவ்வளவு அம்சமாகப் பொருந்தியிருந்தது.

​போட்டோ எடுத்து முடிந்ததும், சங்கீதா அவளை உற்றுப் பார்த்தாள்.


​அம்மா: "புடவை கட்டி, மேக்கப் போட்ட மட்டும்  பத்தாது டி. 

வீட்டு வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யத் தெரியணும். அப்போதான் நீ ஒரு முழுமையான குடும்பப் பொண்ணு 

வீட்ல நிறைய வேலை இருக்கு டி செய்ய ஆரம்பிக்கலாம் வா...


Comments

  1. Wow super a irukku ovvoru part um
    Romba alagana varnanai
    Keep going

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Chapter 1 - Arun to Aruna

Chapter 1 – Village la irundhu City ku vara payan

Chapter 6 – Oru full Day, saree